” விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சி மலரும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், அரச பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டி, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், இதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க தமது அணி தயார் எனவும் சஜித் கூறினார்.
மக்கள் எழுச்சியால் தலைமறைவான காகங்கள், மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளன எனவும், காகத்தால் அனுப்படும் பட்டியலின் பிரகாரமே நியமனங்கள் இடம்பெறுகின்றன என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.










