விலை உயர்வுக்கு எதிர்க்கட்சி கடும் கண்டனம்

பால்மா,  சமையல் எரிவாயு, கோதுமைமா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காடடியுள்ளார்.
எனவே, மக்களுக்கு நிவாரணங்ளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles