” விலை குறைந்ததால் நானுஓயாவில் குழிதோண்டி புதைக்கப்பட்ட அரிசி”

நானுஓயா , கிளாசோ தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

அரிசி விலை கடந்த காலங்களில் அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக 3,000 கிலோ கிராம் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.

அதில், 1,600 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யப்பட்டது. அதற்கிடையில் அரிசியின் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது. ஆகையால், மீதமிருந்த 1,400 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

அரிசி காலவதியானதால், ​அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. ​அதனை அறிந்துகொண்ட தோட்ட நிர்வாகம் அவற்றை கடந்த நாட்களில் குழிதோண்டி புதைத்துள்ளது.

இது தொடர்பில், நானுஓயா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், செவ்வாய்க்கிழமை (02) அவை தோண்டி எடுக்கப்பட்டன.

அரிசி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப் போய் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் , பரிசோனைக்காக அரிசியின் மாதிரிகளையும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles