நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவர் விசேட அதிரடி படையினரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே வெளிநாட்டு கஞ்சா செடிகள் வளர்ப்பில் ஈடுபட்ட 27 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், 77 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கஞ்சா செடிகள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை எனவும் , வீட்டில் மூன்று அறைகளில் வளர்த்து வந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்










