” எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.” – என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேவையற்ற சேமிப்பைத் தவிர்க்கவும்: எனவே, தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
யாழ்ப்பாணம், நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்நிலைமை காணப்பட்டது. இந்நிலையிலேயே அரசாங்க தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
