வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழபோ பகுதியில் கெப் ரக வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.
ஆட்டோவில் பயணித்த தனமல்வில பொலிஸ் நிலைய சாஜன்,அவரது தந்தை மற்றும் அவரது மனைவி ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
மூவரின் சடலங்களும் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அதிகாரியின் 11 வயது மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
கெப் ரக வாகனத்தின் சாரதி உட்பட மூவர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
