வெல்லவாயவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சீல்

வெல்லவாயவில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைகேடுகள் காரணமாக அதற்கு முற்றாக சீல் வைக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (5) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் எடைகள் மற்றும் அளவீட்டுத் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட சோதனையின் பின்னர் குறித்த சீல் வைக்கப்பட்டுள்ளதாக திரு.ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles