“ என்மீது அவ்வளவு ஆசையெனில் நேருக்கு நேர்வந்து பேசுங்கள், ஏன் சபையின் பாதுகாப்புக்கு பின்னால் இருந்து பேச வேண்டும்.” – என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் ஜீவன் தொண்டான்.
சம்பள பிரச்சினைக்கு முடிவுகாணவே நாம் முற்படுகின்றோம், மாறாக சம்பள பிரச்சினையை வைத்து கீழ்த்தரமாக அரசியல் நடத்தவில்லை எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
“ நாங்கள் சும்மா இருந்து முகநூலில் அறிக்கை விடுபவர்கள் அல்லர். நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு வந்தபோது முகாமையாளர்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். மக்களுக்கும், முகாமையாளர்களுக்கும் இடையிலான உறவு முக்கியம் என தோட்ட முகாமையாளர்களை அழைத்து அறிவுறுத்தி இருந்தேன்.
இது விடயத்தில் அரசியல் செய்வதாக இருந்தால் பிரச்சினைதான் வரும் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.
நான் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான், நான் தோட்ட துரையை சென்று சந்திக்க வேண்டியதில்லை, அவன்தான் என்னை வந்து சந்திக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், இராஜாங்க அமைச்சராக இருந்தபோதும் தற்போது அமைச்சராக இருக்கின்றபோதும் மக்களுக்கு பிரச்சினை வந்தால் தட்டி கேட்கின்றேன். நாங்கள் வாய்சொல்வீர்கள் அல்லர். அதனால் மக்கள் மக்கள் இளைஞர்கள் காங்கிரஸ் பக்கம் நிற்கின்றனர்.
நாங்கள் சம்பள பிரச்சினையை முடிக்கவே விரும்புகின்றோம். அதில் அரசியல் செய்யும் நோக்கம் கிடையாது.” – என்றார் ஜீவன்.