ஹட்டன் சதொசவுக்கு 14 நாட்களுக்கு பூட்டு

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சதொச விற்பனை நிலையம் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று நகரின் பிரதான சந்தைப்பகுதியிலுள்ள சதொச விற்பனை நிலையத்தில் பால்மா பெற்றுக்கொள்ள நுகர்வோர் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை காணக்கூடியதாகவிருந்தது.

ஹட்டன் மல்லியப்பு பகுதியிலுள்ள சதொச ஊழியர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அங்கு வேலை செய்த 09 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து 14 நாட்களுக்கு குறித்த சதொச நிலையம் மூடப்பட்டது.

இந் நிலையில் பிரதான சந்தைப்பகுதியிலுள்ள மற்றொரு சதொச விற்பனை நிலையத்தில் பால்மா பெற்றுக்கொள்ள நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொண்டதுடன் அனைவருக்கும் முறையாக பால் மா பக்கட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன.

Related Articles

Latest Articles