ஹப்புத்தளை, பெரகளை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கனரக வாகனமொன்று, மேல் வியாரகல பகுதியில் வைத்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த கனரக வாகன சாரதி தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ராமு தனராஜா
