தான் பதவியேற்பதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் “நரகமே வெடித்துவிடும்” என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ப்ளோரிடா மாகாணத்தின் மார் அ லாகோ நகரில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
” ஜனவரி 20 ஆம் திகதிக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் அது அமாஸ் அமைப்புக்கு நல்லதாக இருக்காது.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடந்தியிருக்கக் கூடாது.
எனவே, தான் பதவியேற்கும் முன் பணயக்கைதிகள் ஒப்படைக்கப்படுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும் எனவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.