ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளை இஸ்ரேலால் வீழ்த்தவே முடியாது!

ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி (வெள்ளிக்கிழமை) அரிதான உரையாற்றினார்.

அப்போது அவர், “இந்த பிராந்தியத்தில் இருந்து மேற்கு நாடுகளுக்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நுழைவாயிலாக இஸ்ரேலை மாற்றும் நோக்கிலேயே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதற்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றன. ஆனால், நமது பிராந்தியத்தின் எதிர்ப்பு சக்தி, இஸ்ரேலுக்கு எதிராக பின்வாங்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles