சர்வக்கட்சி அரசின் நிதி அமைச்சு பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும், அரசில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வாரா என்பது தொடர்பில் ஹர்ஷ டி சில்வா இதுவரை எவ்வித அறிவிப்புகளையும் விடுக்கவில்லை.
சர்வக்கட்சி அரசு அமைக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும், அதில் இணைந்து பதவிகளை பெறபோவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.










