ஹாலிஎல பகுதியில் ரயில் மோதி வயோதிப பெண் பலி

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதுண்டு வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாலிஎல – பதுளை ரயில் பாதையில் ஹப்புவத்தை பகுதியில் வைத்தே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

80 வயதுடைய வயோதிப பெண் சரக்கு ரயிலில் மோதுண்டு பலத்த காயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் ஹப்புவத்தை பதுளை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ராமு தனராஜா

Related Articles

Latest Articles