ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பில் குடும்பஸ்தர்கள் மூவர் கைது!

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின்போது கல்கிஸை மற்றும் உடுகம பகுதிகளில் குடும்பஸ்தர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதவல வீதிக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 40 வயதுடைய மக்கொன மற்றும் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 10 கிராம் 350 மில்லிகிராம் மற்றும் 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உடுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமின் அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 46 வயதுடைய உடுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சந்தேகநபரிடம் இருந்து 12 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர் மேலதிக விசாரணைகளுக்காக உடுகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles