அநுராதபுரம் மாவட்டம் முழுவதற்கும் ஹெரோயின் போதைப்பொருள் விநியோகம் செய்வதில் ஈடுபட்டு வந்த “தம்புத்தேகம அக்கா ” என்ற பெயரில் பிரபலமான பெண் ஒருவரும் அவரது கணவரையும் 12 லட்சம் ரூபா பெறுமதி மிக்க ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக அநுராதபுரம் கோட்ட குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் தெரிவித்தது .
போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் தற்போது புஸ்ஸ கண்காணிப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொஸ்கொட சுஜீவ மற்றும் ரவுல் குமார ஆகியோருடன் தொலைபேசி தொடர்புகளின் மூலம் குறித்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜாங்கனை 05வது மைல் ரந்தேனிகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டதன் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரதான வியாபாரியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் அதன் குரல் பதிவு இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.










