மத்துகம, குருதிப்பிட்ட பகுதியில் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்த இளம் குடும்பஸ்தர் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. நல்லது செய்யபோய், அவர் இன்று உயிரை பறிகொடுத்துள்ளார் என பலரும் சமூகவலைத்தளங்களில் கவலை வெளியிட்டுவருகின்றனர்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த மூன்று மாணவர்களை, நிறுத்தி இவர் அறிவுரை வழங்கி , எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாணவர்கள் பாதுகாப்பு தலைக்கவசத்தை கொண்டு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விராஜ் வெலிபன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
கடந்த 14 ஆம் திகதியே இந்த சம்பவம் இடம்பற்றுள்ளது .
இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சிறுவர் தடுப்பு நிலையத்தில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி மூவரும் மாணவர்கள் ஆவர்.










