ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று மாலை கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

வரவு- செலவுத் திட்டம் குறித்து கலந்துரையாடி முடிவொன்றை எடுக்கவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் சிலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, டலஸ் அணி உள்ளிட்டவையும் கொழும்பில் இன்று மாலை கூடவுள்ளன.










