இஸ்ரேலில் பணியாற்றியபோது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கையரான அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனையின் போது அவரின் உடலில் பல தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அவரது சடலம் களனியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுலா ரத்நாயக்க இஸ்ரேலில் பணியாற்றியபோது கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.










