அனைத்து பாடசாலைகளுக்கும் தொடர்ந்தும் விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்பள்ளிகளை மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவவால் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையிலேயே தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இக்காலப்பகுதியில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles