” நாம் பாலஸ்தீனம் பக்கம்தான் அன்று நின்றோம். இன்றும் நின்கின்றோம். எதிர்காலத்திலும் நிற்போம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச, கண்டி தலதாமாளிகைக்கு நேற்று பயணம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
இதன்போது இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையில் நடைபெற்றுவரும் போர் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கே மஹிந்த மேற்கண்டவாறு பதிலளித்தார்.










