இலஞ்சம் பெற்ற கிராம அதிகாரி கைது

அனுமதிப்பத்திரமின்றி மரம் வெட்டுவதற்காக நபரொருவரிடம் 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கிராம உத்தியோகத்தரொருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நொச்சியாகம பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

நொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 333 குசும்புர கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமை செய்துவந்த கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரான கிராம உத்தியோகத்தர் நொச்சியாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles