அமைதியான தேர்தல் அரசியல் கலாசாரமாக மாற வேண்டும்!

 

அமைதியாக தேர்தல் நடைபெறுவது இலங்கையில் அரசியல் கலாசாரமாக மாற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இந்த நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமைதியான ஜனநாயக சுதந்திரம், எதிர்காலத் தேர்தல்கள் அனைத்திலும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் செயற்பாட்டை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மக்கள் அனுபவித்துள்ளனர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது இந்த நாட்டின் அரசியல் கலாசாரமாக மாற வேண்டும் என்றும் கூறினார்.

Related Articles

Latest Articles