ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று (08) காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சில மணிநேரம் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஒருவழிப் போக்குவரத்துக்காக அவ்வீதி சீரமைக்கப்பட்டுள்ளது.











