கரை வலை மீன்பிடி மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் சஜித்!

ஹம்பந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அப்பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டார்.

பரம்பரை பரம்பரையாக கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த மீனவர்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 3 இறங்குதுறைகள் அமைந்து காணப்பட்டாலும், அவை ஒரு இறங்குதுறையாக மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் காரணமாக இறங்குதுறைகளை நீக்குவதற்கு இந்த மீனவர்களும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

காலாகாலமாக ஒரு நாள் படகு மற்றும் பல நாள் படகு மீன்படித் தொழில் ஈடுபட்டு வந்தோரே இவ்வாறு இந்த வாக்குறுதிகளை நம்பி தமது கரை வலை மீன்பிடி அனுமதிப் பத்திரங்களை இழந்துள்ளனர்.

இதன் காரணமாக இவர்களினது சட்டப்பூர்வவான கரை வலை மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் 22 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்று அங்கிருந்த மீனவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் முன் தெரிவித்தனர்.

சிறிய படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 750 மீட்டர் தூரத்திற்கு அப்பால் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான புதிய அனுமதிப் பத்திரங்களை இந்த மீனவர்கள் தற்சமயம் எதிர்பார்க்கின்றோம்.

தற்போதுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் அனுமதிப் பத்திரம் இல்லாமல் இந்த கரை வலை மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதற்கு அனுமதிக்காமல் இருக்கின்றனர். இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை நீண்டுள்ளன என்று இப்பிரதேச மீனவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் முன் தெரிவித்தனர்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இப்பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தேவையான தலையீடுகளை மேற்கொள்வேன் என்று வாக்குறுதியளித்தார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles