அரசாங்கத்துக்கு மற்றும் ஒரு தலையிடி

மருத்துவப்பொருட்களின் விலையை குறைக்கவேண்டும் மற்றும் சுகாதார பணியாளர்களின் வேதன முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி 16 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நாளை காலை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் பல வைத்தியசாலைகளின் பணிகள் இயல்பை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தமக்கு உரிய தீா்வு தரப்படாதுபோனால், எதிர்வரும் 30ஆம் திகதியில் இருந்து முழுமையான பணிப்புறக்கணிப்புக்கு செல்லவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

தமது பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளராக இருக்கும் இராணுவ அதிகாரியோ அல்லது அமைச்சரோ இன்னும் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சுகாதாரத்துறையில் வேதன முரண்பாடுகள் இருப்பதாக கூறியபோதும் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து எதனையும் கூறவில்லை என்றும் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

Related Articles

Latest Articles