உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், பராகுவே அணிக்கு எதிரான போட்டியை 0-0 என்ற கணக்கில்சமநிலை செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெற்றுள்ளது.
பராகுவே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்பதால் அந்த அணி பெரும் பதற்றத்துடன் காத்திருக்கிறது.
சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்திய போதிலும், கடைசி நிமிடங்களில் பராகுவே அணி கோல் அடிக்கக் கடுமையாகப் போராடியது.
எனினும், ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிவடைந்ததால் ஆஸ்திரேலிய அணி 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
குரூப் D பிரிவில் இணை நடத்துனரான அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குச் சென்றுள்ளது.
வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அடுத்த சுற்றில், குரூப் G பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியுடன் ஆஸ்திரேலியா மோதவுள்ளது.
தற்போது 4 புள்ளிகளுடன் உள்ள பராகுவே அணி, மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் சிறந்த 8 அணிகளுக்கான வாய்ப்பின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறக் கூடும்.
இருப்பினும், 2010-ல் கால்இறுதி வரை சென்ற அந்த அணி, இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள மற்ற குரூப் போட்டிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.










