அரசாங்கத்துக்கு முடியாவிட்டால் ஆட்சியை நாமலிடம் ஒப்படைக்கவும்!

” 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் செய்த செயல்களுக்காக ஜே.வி.பியினருக்கு தூக்கு தண்டனையே வழங்கப்பட வேண்டும்.” – என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், ஆட்சியை நாமலிடம் ஒப்படையுங்கள். நாம் செய்து காட்டுகின்றோம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நான் அன்றும், இன்றும், என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன்தான் இருந்தேன், இருக்கின்றேன். இருப்பேன். எனினும், மஹிந்த ராஜபக்ச இந்நாட்டுக்காக செய்ததை மக்கள் மறந்துவிட்டனர். மஹிந்தவால்தான் நாம் இந்த இடத்தில் நிற்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டை மீட்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தோம். அதுவும் கட்சியின் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டே அதனை செய்தோம்.

என்னையும், எனது மனைவியையும் சிறையில் அடைத்தனர். வெட்கம் ஜனாதிபதி வெட்கம் … என்னை சிறையில் அடைத்தால் பரவாயில்லை. மனைவியும் அடைத்தனர். இதுவா அரசியல்? வடமத்திய மாகாண முன்னாள் முதல்வரையும், முன்னாள் அமைச்சர் சந்திரசேனவின் மனைவியையும் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால் 88, 89 காலப்பகுதியில் செய்த செயல்களுக்காக ஜே.வி.பியினரை சிறையில் அல்ல, தூக்குக்கே அனுப்ப வேண்டும்.
எனவே, நாட்டுக்கு நல்லதை செய்யுங்கள், இல்லையேல் நாமும் மாற்று நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்பதை ஆளுங்கட்சியினருக்கு கூறிக்கொள்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles