அரசியலமைப்பு பேரவைக்கு கபீர் ஹாசீம்! எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிவு!

அரசியலமைப்பு பேரவைக்கு தமது தரப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீமை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ள ஏற்பாடுகள் அமுலுக்கு வர வேண்டுமெனில் முதற்கட்டமாக அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு பேரவையில் 3 சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் இடம்பெற வேண்டும்.

பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பதவிநிலை உறுப்பினர்கள். ஜனாதிபதியின் பிரதிநிதியாக நிமல் சிறிபாலடி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியின் சார்பில் ஒருவர் தெரிவாக வேண்டும். அந்த வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கவுள்ளது.

ஏனைய இருவரையும் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து நியமிக்க வேண்டும். இந்நிலையிலேயே தமது தரப்பில் இருந்து கபீர் ஹாசீமை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை, மூன்று சிவில் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Related Articles

Latest Articles