அரச ஊழியரின் வீட்டில் பட்டப்பகலில் கொள்ளை!

மன்னார் பேசாலை பொலிஸ் நிலையப் பிரிவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் சூறையாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றுத் திங்கள் கிழமை காலை பத்து மணிக்குப் பிற்பாடு பேசாலை பகுதியிலுள்ள அரச ஊழியர்களின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டத்திலிருந்து தெரிய வருபவை வருமாறு:-

சம்பவம் அன்று மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் இவ்வீட்டுக்காரரின் மனைவி வழமைபோன்று காலையில் தனது கடமைக்காக அலுவலகம் சென்ற பின், பிரபல பாடசாலையில் பிரதி அதிபராக கடமைபுரியும் கணவன் பாடசாலை விடுமுறையாக இருந்தபோதும் தனது பிள்ளைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வேறு அலுவலுக்காக வெளியில் சென்றுள்ளார்.

பிற்பகல் ஆசிரியரான கணவர் வீட்டுக்குத் திரும்பி வந் த பொழுது வீட்டுக் கதவு உடைபட்டு இருந்ததைக் கண்டுள்ளார். இதன்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மனைவியின் தாலிக்கொடி உட்பட பதின்மூன்று அரைப் பவுண் நகைகளும் ஐம்பதாயிரம் ரூபா பணமும் களவாடிச் செல்லப்பட்டதாக பொலிஸில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருடனை கண்டு பிடிக்கும் நோக்கு டன் பொலிஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனை யிடப்பட்டுள்ளது. இது வரைக்கும் சந்தேக நபர் எவரும் கைது செய்யப்ப டாத போதும் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles