ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கஎதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் நோக்கிலுமே ஜனாதிபதி அங்கு செல்கின்றார் எனத் தெரியவருகின்றது.
பிரான்ஸில் உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளை ஜனாதிபதி நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இந்தத் ராஜதந்திர பயணத்தின்போது உலகின் மிகப்பெரிய கடல்சார் போக்குவரத்து மற்றும் தளவாட (Logistics) நிறுவனங்களில் ஒன்றான சி.எம்.ஏ சி.ஜி.எம் (CMA CGM) நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரொடோல்ஃப் சாடே (Rodolphe Saadé) ஜனாதிபதியை சந்திப்பார் என தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பை இலங்கைக்கான பிரான்ஸ் தூதர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பிரெஞ்சு வணிக நிறுவனங்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திப்பதற்குரிய வாய்ப்பு உள்ளது.










