அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு நல்லதல்ல. அதனை கடுமையாக எதிர்க்கின்றோம். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய இன்று (13) மீண்டும் வலியுறுத்தினார்.
நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பில் பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம். இது விடயத்தில் அவசரமாக முடிவெடுப்பது நாட்டுக்கு நல்லது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.










