வாக்குறுதியை மீறும் அமெரிக்காவை நம்ப முடியாது

ஈரான் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறுவது அதன் இயல்பான குணம் என்றும், இத்தாக்குதல்கள் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

தனது நாட்டின் இறைமையையும் எல்லைகளையும் பாதுகாக்க உறுதியுடன் இருப்பதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles