” அரச நிவாரண திட்டத்துக்குள் தோட்ட தொழிலாளர்களை உள்ளீர்க்க நடவடிக்கை ” – அரவிந்தகுமார் கோரிக்கை

குறைந்த வருமானம் ஈட்டுவோரின் பட்டியலுக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளீர்த்து அவர்களுக்கும் அரச வாழ்வாதார நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ‍பெருந்தோட்டங்கள் அடங்கிய பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்ட செயலாளர்களை, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் எழுத்துமூலம் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிவாரணம், சமுர்த்தி நிவாரணம், நோயாளர்களுக்கான நிவாரணம், குறை வருமானம் பெறுவோருக்கான நிவாரணம் மற்றும் ஏனையோருக்கான நிவாரணம் என பல்வேறு தரப்பினருக்கு அரச நிவாரணங்கள் வழங்கப்பட்டு வரும் அதேவேளை இந்நாட்டில் மிகக்குறைந்தளவிலான வருமானத்தை ஈட்டி வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான அரச நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். எமது மக்கள் மீது பகிரங்கமாகவே பாரபட்சம் காட்டப்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.

மேற்படி நிவாரணங்களை பெற்றுக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் கிராம புறங்களில் மாத்திரமே என்ற நிலைப்பாடு தவறானது. இந் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அதிக தகுதிகளை கொண்டவர்கள் இவ் பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்வோரே. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும்பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அரச நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு முறையான அறிவித்தல்களை வழங்குமாறு தயவாக கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles