பாமஸ்டன் தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் பாமஸ்டன் பாடசாலையின் சித்திர பாட ஆசிரியருமான செல்வராஜ் ஆம்ஸ்ட்ரோங் நேற்று (21) காலமானார்.
சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பாமஸ்டன் தோட்ட அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி கிரியைகள் நாளை (23) அவரின் இல்லத்தில் நடைப்பெற்று பாமஸ்டன் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவர் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட எபஸ்போர்ட் தமிழ் வித்தியாலயம் ,கார்லிபேக் தமிழ் வித்தியாலயம் மற்றும் பாமஸ்டன் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றிவர்.
அத்துடன் இவர் சங்கராஜி அறக்கட்டளையின் இணைப்பாளராக செயற்பட்டதுடன் அவ் அமைப்பினூடாக மத்திய மாகாணத்தில் பல்வேறு சமூக நலன் திட்டங்களை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை பி.கேதீஸ்










