ஆட்டை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் எனக் கூறியவர்மீது மண்வெட்டியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவமொன்று திருகோணமலை , நொச்சிக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் நொச்சிக்குளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் ராஜேந்திரன் (65வயது) என்பவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதலால் கை உடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அங்கு பெறப்பட்ட XRAY மூலம் கை உடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










