ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதிமைச்சர் நளிந்த ஹேவகே அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் இன்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.










