நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை – சாஞ்சிமலை பிரதான வீதியில் புளியாவத்தை பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
இன்று (17) அதிகாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற திருமண வைபவத்தில் பங்கேற்றுவிட்டு, மேற்படி நபர்கள் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தவேளையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் டிக்கோயா புளியாவத்தை மேல்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய தனபாலன் நிஷாந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்
