” மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை. தமது வாழ்வை சூழ்ந்துள்ள இருள் இன்னும் நீங்கவில்லை.”
இவ்வாறு பொகவந்தலாவ டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசியல் மற்றும் தொழில்சார் உரிமைகளை வலியுறுத்தியும் மேற்படி தோட்டத் தொழிலாளர்கள் இன்று கறுப்பு பட்டியணிந்து தொழிலில் ஈடுபட்டனர்.

” 200 வருடங்கள் என்பதை கொண்டாடுவதைவிடுத்து, தீர்வை வழங்குவதே சிறப்பாக இருக்கும். நாட்டில் இன்று வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. ஆனால் ஆயிரம் ரூபாதான் சம்பளம் வழங்கப்படுகின்றது. தொழிற்சங்க தலைவர்கள் எம்மை ஏமாற்றிவருகின்றனர்.” – எனவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்
