இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து மாயை தோற்றுவிப்பு!

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து மாயை தோற்றுவிப்பு!

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் அடுத்த வார நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் ஒளித்துவைத்துள்ளது எனவும், அவை விரைவில் மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

எனவே, நாடாளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி கூடும்போது மேற்படி ஒப்பந்தங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்வில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

” அடுத்த வாரம் முன்வைக்கப்படமாட்டாது, அதற்கு சற்று காலம் வேண்டும். எனினும், நிச்சயம் சபையில் முன்வைக்கப்படும். கைச்சாத்திடப்பட்ட சில ஒப்பந்தங்களை வெளியிடுவதற்கு இரு நாடுகளினதும் இணக்கம் அவசியம்.
ஒப்பந்தங்களை வெளியிடுவதுதான் அரசாங்கத்துக்கு சாதகமாக அமையும். ஏனெனில் சிலர் போலியான மாயையை தோற்றுவித்துவருகின்றனர்.

இந்தியா, பாகிஸ்தானுக்கிடையில் மோதல் வந்தால் கொழும்புக்கு குண்டு போடப்படுமாம் என்றெல்லாம்கூட மாயையை தோற்றுவித்துவருகின்றனர்.”- எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles