இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது யார்?

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த 5வது சீசன் குறைவான டிஆர்பியை பிக்பாஸ் வரலாற்றில் பெற்றுள்ளதாக சில விமர்சனங்கள் எல்லாம் வந்தது.

ரசிகர்களும் யாரையும் பெரியதாக கொண்டாடவே இல்லை, அதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த வாரம் கமல்ஹாசன் இடம்பெற்ற நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

வருண்-அக்ஷாரா இருவரும் வெளியேறிய பின் பழைய போட்டியாளர்களை சந்தித்து வருகிறார்கள்.

தற்போது இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆவார் என பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இதுவரை கிடைத்த ஓட்டுகளில் சஞ்சீவ் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார்.

இதனால் இவர் இந்த வாரம் வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Latest Articles