இன்றும் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல். சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.

சில பகுதியில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles