இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழர்களின் ஆதரவு அவசியம் – எல்லே குணசங்க தேரர் அழைப்பு

வடக்கு, கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையும் தமது தாயகம்தான் எனக்கருதி இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர்.

நாட்டு வளங்களை பாதுகாப்பதற்கான போராட்டமே 2ஆவது சுதந்திர போராட்டம் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் தேரர் மேலும் கூறியவை வருமாறு,

” வடக்கு, கிழக்கு தமது தாயகம் என தமிழ் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கூறிவருகின்றனர். ஏன் இரு பகுதிகளை மட்டும் தாயகமாக கருத வேண்டும்? முழு நாடும் எமது என கூறுங்கள், அதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள்.

யாழ். நாகதீப எமது பகுதி என நாம் உரிமைகோரவில்லையா? அதுபோல தமிழ் மக்களும் முழு இலங்கையும் தமக்கானது என எண்ண வேண்டும்.
இன்று எமது நாட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன. தேசிய சொத்துகள் விற்கப்படுகின்றன. சொந்த நாட்டிலேயே வாடகைக்காரர்கள்போல் வாழ வேண்டிய நிலை எமக்கு. இந்நிலைமை மாற வேண்டும், இந்நாடு எமது சொத்து, அதற்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு வர வேண்டும். அப்போதுதான் எமது மரபுரிமைகளைக் காக்கலாம். வளங்களை காப்பதற்கான 2ஆவது சுதந்திர போராட்டத்துக்கு அனைத்து இன மக்களும் ஆதரவு வழங்க வேண்டும், ஒன்றிணைய வேண்டும். எமது அனைத்து தலைவர்களும் இணைந்துதான் சுதந்திரத்தை பெற்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

தொல்பொருள் என்பது ஒரு இனத்துக்குரியது அல்ல. ஒரு பழமையான ஆலயம் இருந்தால் அதனையும் அனைவரும் பாதுகாக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருட்களை பாதுகாக்குமாறு தமிழ் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த 75 ஆண்டுகளாக தமிழரோ, சிங்களவர்களோ வெற்றிபெறவில்லை. மாறாக வெட்டிக்கொண்டோம். வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த ஸ்தானங்களில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். வடக்கிலும், தெற்கிலும் உள்ள அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்கிவிட வேண்டாம் எனவம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles