இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ்த் தேசியக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது.
கல்லூரியின் அதிபர் பி. கமலேஷ்வரன் தலைமையில் இடம்பெறும் இவ் இல்ல விளையாட்டுவிழா இறக்குவானை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது.
விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை, கெளரவ அதிதியாக சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ. புஷ்பகுமார பங்கேற்கவுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக எம்பிலிப்பிட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஜி. அனுர அபேவிக்கிரம, எம்பிலிப்பிட்டிய வலயக் கல்விப் பணிமனையின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் ரொஷான் வெத்தகே, கொடக்கவல பிரிவு பணிப்பாளர் மகேஷிகா கல்வத்த, எம்பிலிப்பிட்டிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சர்வதேச மரதன் வீரர் ராகலை மெய்யப்பன் சசிக்குமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
