இலங்கையில் புதிய ஊடக நிறுவனங்கள் உருவாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் MediaInc நிகழ்ச்சித்திட்டம்

IREX நிறுவனத்தின் புத்தாக்கம் மிக்க Media Incubator மற்றும் Media Accelerator நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கையில் டிஜிட்டல் ஊடக நிறுவன ஆரம்பிப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்ககப்பட்டுள்ளன.

இலங்கையின் ஊடகப் பரப்பில் “நேர்மறையான தாக்கம்” ஒன்றை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்ட மாற்றத்தை ஏற்படுத்தத்தக்க MediaInc நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் தொகுதிக்கு உள்வாங்கப்படவுள்ள அமைப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்டுள்ள ஆரம்ப நிலையில் உள்ள மூன்று புத்தாக்கம் மிக்க நிறுவனங்கள் தமது எண்ணக்கருக்களை வளர்த்தெடுப்பதற்கான மற்றும் தமது இயங்குதளங்களை ஆரம்பம் செய்வதற்கான முழுமையான ஆதரவினை இத்ததிட்டத்தின் ஊடாக பெறவுள்ளன.

ஆரம்ப நிலையில் காணப்படுகின்ற இந்த டிஜிட்டல் ஊடக நிறுவனங்கள் சமூக ஊடகங்கள் மூலம் தமது பிரசன்னத்தை மக்கள் மத்தியில் ஏற்கனவே வெளிப்படுத்துவதற்கு ஆரம்பித்துள்ளன. இது அந்நிறுவனங்கள் Incubator படிநிலைக்கு தெரிவு செய்யப்பட ஏதுவாகியது, இப்படிநிலையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அவற்றின் ‘எண்ணக்கரு நிலை’ மீது கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன் பொழுது குறித்த நிறுவனங்களின் உள்ளடக்கம், வர்த்தகமயமாக்கல் மற்றும் இயக்கம் என்பன தொடர்பான முக்கிய அம்சங்களில் முழுமையான பயிற்சி மற்றும் ஆதரவு என்பன வழங்கப்படவுள்ளன. இந்த முயற்சிகளின் ஊடாக பொதுமக்களின் தகவலுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன் மாற்று செய்தி மூலங்களை வலுப்படுத்தவும் MediaInc நிகழ்ச்சித்திட்டம் எதிர்பார்க்கின்றது.

MediaInc முன்னெடுப்பு IREX நிறுவனத்தின் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தல் (MEND) நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றது. USAID நிறுவனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் MEND நிகழ்ச்சித்திட்டம் நடுநிலையான, நம்பகத்தன்மை மிக்க மற்றும் புறவய நிலையில் உள்ள தகவல்கள் மற்றும் செய்திகளை இலங்கை மக்களுக்கு வழங்குவதை இலக்காகக் கொண்டதாகும்.

MediaInc நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் தொகுதிக்கு கிடைக்கப்பெற்ற 80 இற்கும் அதிகமான விண்ணப்பங்களில் இருந்து இந்த மூன்று நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தமது வாசகர்களுக்கு சாதாரணமாக அணுகல் கிடைக்காத வகையில் அமைந்த தொடர்புடைய தகவல்களை வழங்குவதில் அவை கொண்டுள்ள வகிபாகம், தற்காலத்தில் அந்நிறுவனங்கள் மக்களைச் சென்றடைந்துள்ள அளவு, அவற்றின் இயங்குதளங்களின் புத்தாக்கம் மிக்க தன்மை மற்றும் வளர்ச்சியடைவதற்கு அவை கொண்டுள்ள இயலுமை என்பன இந்த நிறுவனங்களை தெரிவு செய்வதற்கான வரன்முறைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

இப்படிநிலையில் வழங்கப்படும் ஆதரவுகளில் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் ஆலோசனை, இணைந்து பணிபுரியத்தக்க கலையகம் மற்றும் பணித்தலத்துக்கான அணுகல் மற்றும் அவற்றின் வர்த்தக நாமங்களை சட்டரீதியாக பதிந்து கொள்வதற்கான உதவி என்பன உள்ளடங்குகின்றன. பங்குபற்றும் ஒவ்வொரு நிறுவனத்தினதும் தேவைக்கு ஏற்ற வகையில் பயிற்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவம் அத்துடன் கையடக்க தொலைபேசி ஊடகவியல் உள்ளடங்கலாக டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாயம் போன்ற விடயப்பரப்புகள் உள்ளடங்குகின்றன.

தெரிவு செய்யப்பட்டுள்ள ஆரம்ப நிலை ஊடகங்களில் இலங்கையில் ஆங்கில செய்திகளை ஒன்றாக தொகுத்து வழங்கும், பரவலாகப் பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஒன்றை முகாமைத்துவம் செய்யும் ஹேஷான் டீ சில்வா, இலங்கையில் வர்த்தகம் தொடர்பில் கவனம் செலுத்தும் சிங்கள மொழி மூலத்தில் இயங்கும் ஒரேயொரு சமூக ஊடக அலைவரிசையான Sri Lanka Business TV என்ற ஊடகத்தை உருவாக்கிய பொருளாதார நிபுணரான ஜயந்த கோவிலகொடகே மற்றும் மலையக மக்கள் தொடர்பான செய்திகளை பகிரும் தளம் ஒன்றை வழங்கும் குடிமக்கள் ஊடகவியல் முன்னெடுப்பான kuruvi.lk என்ற தளத்தின் ஸ்தாபகரும், ஊடகவியலாளருமான கிருஷ்னசாமி ஹரேந்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

IREX நிறுவனம் உருவாக்கியுள்ள நிபுணத்துவம் மிக்க பயிற்றுனர் அணியில் பின்வரும் பயிற்றுனர்களும் அங்கம் வகிக்கின்றனர்: டேவிட் ஹேவார்ட் (David Hayward) ஊடகம் மற்றும் டிஜிட்டல் செய்தி என்பவற்றில் 25 வருடங்களுக்கும் அதிக அனுபவம் மிக்க முன்னாள் ஊடகவியலாளர். வென்டி பில்மர்(Wendy Pilmer) BBC நிறுவனத்தில் பல சிரேஷ்ட பதவிகளை வகித்த இவர் தற்பொழுது உலகின் முன்னணி ஒலிபரப்பாளர் நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் நிபுணராக செயற்படுகின்றார். அத்துடன் நீல் மோர் (Neal Moore) உள்ளடக்க மூலோபாயம் மற்றும் கதை வெளியிடல் ஆகிய விடயங்களில் நிபுணரான இவர் அத்துறையில் 20 வருடங்களுக்கும் அதிகமான சர்வதேச அனுபவம் கொண்டவராவார்.

இம்முன்னெடுப்பு பற்றி கருத்து வழங்கிய ஜீன் மெக்கன்ஸி (Jean MacKenzie) பின்வருமாறு குறிப்பிட்டார்: “இந்த இயங்குநிலை மற்றும் ஆர்வம் மிக்க டிஜிட்டல் ஊடக ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் அவற்றை வலுப்படுத்துவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்நிறுவனங்கள் தமது பிரசன்னத்தை ஏற்கனவே மக்கள் உணரும் நிலைக்ககு கொண்டு வந்துள்ளதுடன் இந்நாட்டின் ஊடக வடிவமைப்பில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதில் தமது தனித்துவம் மிக்க வழிகளில் பங்களிக்கின்றன”. “தற்கால தகவல் பரப்பின் முனைவாக்கம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. பிரதான ஊடகங்களின் பக்கச்சார்பு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை முறியடிக்கும் செய்திகளை வழங்கவும் மக்களுக்கு தகவல்களை வழங்கி அறிவூட்டவும் காணப்படும் மாற்றுக் குரல்களை வலுப்படுத்துவது முக்கியமானதாகும். செயற்படுநிலை மிக்க ஜனநாயகத்தின் அத்தியாவசியமான பகுதி ஒன்றாக தகவலறிந்த மக்கள் அமைகின்றனர்”.

Related Articles

Latest Articles