இலங்கையுடன் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள அயர்லாந்து

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து அணி முன்னர் திட்டமிட்டதற்கு பதிலாக இலங்கையுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.

அயர்லாந்து அணி இலங்கையில் இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலேயே ஆடுவதாக முன்னர் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அட்டவணையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 9ஆம் திகதி இலங்கை வரும் அயர்லாந்து அணி ஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து அணி இலங்கையுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது இது முதல்முறையாக அமையும்.

Related Articles

Latest Articles