” போர் சூழ்நிலையில்கூட, உக்ரைன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆனால் எமது நாட்டு நிதி அமைச்சர், நாடாளுமன்றம் வந்து, நிதி நிலைவரம் பற்றி தெளிவுபடுத்துவதில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிஎதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி.,
” நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10 ஆம் திகதியே நிதி அமைச்சர் சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நிதி நிலைவரம் பற்றி இதுவரை தெளிவுபடுத்தவில்லை. எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும். தற்போது ரஷ்யாவிடம்கூட கடன் கேட்கின்றனர். எமது நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துவிட்டது ” – என்றார் கிரியல்ல எம்.பி.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,
” உக்ரைன் ஜனாதிபதிகூட, நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆனால் எமது நாட்டு நிதி அமைச்சரவை காணவில்லை.” என்று குறிப்பிட்டார்.
