நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
20 கைதிகளும், 08 சிறைச்சாலை அதிகாரிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.










