உடப்புசல்லாவையை சேர்ந்த சகோதரர்கள் யாழில் சடலங்களாக மீட்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சியசாலையில், இன்று (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மலையகம் – நுவரெலியா , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதான வேலாயுதம் புவனேஸ்வரம் மற்றும் 38 வயதான வேலாயுதம் ரவி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை முனை பகுதியில் கடற்தொழில் உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்த களஞ்சியசாலையில் இருவரும் உறங்கி கொண்டிருந்தவேளை தீ விபத்து ஏற்பட்டு இருவரும், உறக்கத்திலேயே தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles