உலகிலேயே மிக உயரமான பாலத்தை நிர்மாணித்தது சீனா!
உலகிலேயே மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது. இந்த பாலம், எதிர்வரும் ஜூனில் திறக்கப்பட உள்ளது.
சீனாவில் பள்ளத்தாக்குகள் நிறைந்த குய்ஸ{வு, யுனான் உள்ளிட்ட மாகாணங்களில், கிராமப்புறங்களை இணைப்பதற்காக நதிகளின் மீது உயரமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உலகின் மிக உயரமான 100 பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, இந்த பகுதிகளில் தான் இருக்கின்றன.
தற்போது, உலகின் மிக உயரமான பாலமாக 1,854 அடி உயர ட்யுஜ் பாலம் இருக்கிறது. சீனாவின் யுனான் மாகாணத்தில், பெய்பென் ஆற்றின் துணை நதியான நிஸ{ ஆற்றின் மீது இந்த பாலம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இதை விட மிக அதிக உயரமாக 2,051 அடி உயரத்தில், பெய்பென் ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்றை சீனா கட்டியுள்ளது.
குய்ஸ{வு மாகாணத்தில் பெய்பென் ஆற்றின் மீது, இரண்டு மிகப்பெரிய பள்ளத்தாக்குகளை இணைக்கும் விதமாக இந்த பாலம் அமைந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈபிள் கோபுரத்தின் உயரம் 1,082 அடி. ஆனால் இந்த பாலத்தின் உயரம் 2,051 அடி. வரும் ஜூன் மாதம் இந்த பாலம் திறக்கப்படுகிறது.
‘ஹியாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்’ என அழைக்கப்படும் இந்த பிரமாண்ட பள்ளத்தாக்கு பாலத்தை அமைப்பதற்காக, 22,000 டன் எடையிலான எக்கு தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அளவு எக்கு தூண்களைக் கொண்டு மூன்று ஈபிள் கோபுரங்களை கட்டி விடலாம். இரண்டு பள்ளத்தாக்குகளை இணைக்கும் வகையில், 3.21 கி.மீ., நீளத்துக்கு அமைந்துள்ள இந்த பாலத்தை அமைப்பதற்கு, மொத்தம் 2,200 கோடி ரூபா (இந்திய ரூபா மதிப்பு) செலவிடப்பட்டுள்ளது.
இந்த பாலம், குய்ஸ{வு மாகாணத்தில் பெய்பென் நதிக்கரையோர கிராம மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், சீனாவின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இந்த பாலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.